தமிழ்நாடு

தூத்துக்குடியில் போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு - படுகாயமடைந்த காவலர் சம்பவ இடத்திலேயே பலி

தூத்துக்குடி அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவரும், தாக்குதல் நடத்திய ரவுடியும் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளி துரைமுத்து என்பவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கொலை திட்டத்தோடு பதுங்கியிருந்த அவரை பிடிக்க போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த குற்றவாளி அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுப்ரமணி என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு காவலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாக்குதல் நடத்திய ரவுடி துரைமுத்து படுகாயமடைந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்.பி. உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் வல்லநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை சதிவலை திட்டத்தோடு பதுங்கி இருந்தவர்கள் பிடிக்க சென்றபோது, போலீசார் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு காவலர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு