நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த தி.மு.க. பிரமுகர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும், கடந்த 23ஆம் தேதி, வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சிசிடிவி காட்சி மூலம் ஆதாரங்கள் சிக்கின.
ஆயுதங்கள் - ஸ்கார்பியோ கார் பறிமுதல்
3 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, நெல்லையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரின் மகன் கார்த்திகேயன் என்பவரை கைது செய்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அரசியல் ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் கார்த்திகேயனின் குடும்பத்தாருக்கும் உமா மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கும் பிரச்சினைகள் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. தாயின் அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி இருந்ததால் கொலை செய்ததாக தனிப்படை போலீசார் விசாரணையின்போது கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கொலையான அன்று காணாமல் போனதாக தெரிவித்த 25 பவுன் நகை மற்றும் கொலையான அன்று கார்த்திகேயன் பயன்படுத்திய உடைகள் ஆகியற்றை கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதனை ஆதாரமாகக் கொண்டே இந்த வழக்கில் கார்த்திகேயனை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இருவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கான கோப்புகளை தமிழ்நாடு போலீசாரிடம் பெற்ற பிறகு சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓரிரு நாளில் விசாரணை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் இன்று 10 மணிக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த காட்சிகளின் அடிப்படையில், சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை, தனிப்படை போலீசார் மதுரையில் மடக்கி பிடித்தனர். கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் , கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. உமா மகேஸ்வரியிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப்பணம் குறித்து, கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் பகை காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது உறுதியாகி உள்ளதாக
நெல்லை போலீசார் தெரிவித்தனர்.