தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Thoothukudi

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து, அறிக்கையை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இதற்கு எதிராக தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார், ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த‌து. மேலும், மனுவுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உள்ளிட்டோருக்கு உச்சநீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jana Nayagan FDFS | "இதுக்காகவே வந்திருக்கேன்.. படம் அட்டகாசமா இருக்கு" - மகிழ்ச்சியில் ரசிகைகள்

Jana Nayagan | "தடைகளை உடைத்த One Man Army தளபதி CM விஜய் தான்" - மகிழ்ச்சியில் குதித்த ரசிகை

Jana Nayagan | தியேட்டரில் மேடை போட்டு கொண்டாட்டம்.. நெல்லையில் மாஸ் காட்டிய ரசிகர்கள்

Keralam | Jana Nayagan | கொச்சினில் ஜனநாயகன் கொண்டாட்டம்.. விடிவதற்கு முன்பே இவ்வளவு கூட்டமா!

Jananayagan | கேரளத்தில் ரிலீசானது CM விஜய்யின் ஜனநாயகன் - திருவிழாவை கொண்டாடும் ரசிகர்கள்