தமிழ்நாடு

தூத்துக்குடி சம்பவம்: ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்" - ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப‌ப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர் தெரிவித்தார்

தந்தி டிவி

கடந்த 2018 மே 22 மற்றும் 23ம் தேதிகளில், தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினி சென்றார். அப்போது சமூக விரோதிகள் புகுந்ததால் கலவரம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில், ரஜினி தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி, நேரில் ஆஜர் ஆனார். அப்போது, ரஜினிகாந்த்திற்கு கேட்கப்படும் கேள்விகளை, சீல்வைத்த கவரில் ஆணையம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர், நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப‌ப்படும் என்றார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு