தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முதன்மை அமர்வுக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முதன்மை அமர்வுக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு அளித்த அறிக்கையை அடுத்து, வழக்கை முடித்து வைத்தது.இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில்,தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டுமென, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை