கீழ செக்காரக்குடியை சேர்ந்த சோம சுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிராஜா பாண்டி, பாலா, தினேஷ் ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர். பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தட்டாப்பாறை காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.