Thoothukudi Murder | பெண்ணை வெட்டி சாய்த்த காவலர் - வாக்குமூலத்தில் வெளியான உண்மை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் கணினி மையம் நடத்தி வந்த பிரியா என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பிரியாவின் அக்கா சுப்புலட்சுமியுடன், அதே ஊரைச் சேர்ந்த காவலர் முத்துக்குமாருக்குப் பழக்கம் இருந்துள்ளது. இதனை பிரியா கண்டித்ததோடு, சுப்புலட்சுமியிடம் காவலர் வாங்கிய 20 பவுன் தங்க நகைகளைத் திரும்பத் தருமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், தனது கணினி மையத்தை பூட்டிக்கொண்டிருந்த பிரியாவை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். ஏற்கெனவே சொந்த மாமனாரை வெட்டிய வழக்கில் பிணையில் வெளிவந்த முத்துக்குமார், தற்போது நகையைக் கேட்டதால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறையிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.