தமிழ்நாடு

கல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.

தந்தி டிவி
தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ், என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமது சகோதர் சுரேஷ், இன்பென்ட் ஜீசஸ் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வராக இருந்த போது கடந்த 2013ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டினார். அந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்காததால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.சி.டி.வி காட்சிகள் வைத்து தான் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்தி நீதி நிலைநாட்டப்படும் என்று இந்த நீதிமன்றம் நம்புவதாக கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

///////////////////

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்