தமிழ்நாடு

அதிசய பனிமய மாதா பேராலய 436-வது ஆண்டுத் திருவிழா - மாதா தேர்ப்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 436-வது ஆண்டுத் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 வது நாளான நேற்று மாலை மறைமாவட்ட ஆயர் இவான் அம்ரோஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாதாவின் சொரூபம் வைக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பனிமய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாதி, மத பேதமின்றி மக்கள் கலந்து கொண்ட நிலையில், மாவட்ட எஸ்.பி.தலைமையில் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

CM Vijay | TVK | IUML | சத்தத்தை உயர்த்திய அமைச்சர் ஷாஜகான் - அரங்கை திரும்பி பார்க்க வைத்த வார்த்தை

Minister Rajmohan | "யாரும் யாருக்கும் பிச்சை போட வேண்டிய அவசியமில்லை"-எரிமலையாய் அமைச்சர் ராஜ்மோகன்

TVK | DMK | TVK | DMK | கொதித்த அமைச்சர் ஆதவ்.. கொந்தளித்த எதிர்தரப்பு.. பாரபட்சமே இன்றி கண்டித்த சபாநாயகர்

CMVijay | Nepal | நேபாள கோரம் - CM விஜய் உத்தரவு.. உடனே டெல்லி பறக்கும் அமைச்சர்கள்

KN Nehru | Rajmohan | KN நேரு முன்வைத்த அதிமுக்கிய விஷயம் - உடனே ஆஃப் செய்த அமைச்சர் ராஜ்மோகன்