தமிழ்நாடு

இறப்பில் கோடி கோடியாக காசு.. அரண்ட தூத்துக்குடி துறைமுகம் - மணிகண்டபிரபு `மகாபிரபுவான' கதை

தந்தி டிவி

தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று இறந்த தொழிலாளர்களின் பென்ஷன் தொகை பல கோடி ரூபாயை, தனியாக வங்கி கணக்கு தொடங்கி ஒருவர் அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vovt

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கையாளும் தொழிலாளர் குழுமம் தனியாக செயல்பட்டு வந்தது. இதில், சுமார் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பென்ஷனாக சுமார் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் பலர் இறந்து விட்ட நிலையில், அவர்களின் பென்ஷன் தொகை கணக்கு துறைமுக அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட பென்ஷன் பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களான மணிகண்ட பிரபு உள்ளிட்ட சிலர், இறந்த துறைமுக ஊழியர்களை இறந்ததாக கணக்கில் கட்டாமல், அவர்களின் பெயரில் முழு பென்ஷன் தொகையும் வேறொரு வங்கி கணக்கை மோசடியாக உருவாக்கி பெற்று வந்துள்ளனர். இதுகுறித்த புகாரைத்தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை

அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..