பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதனை வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோல் மாடித்தோட்டம் வைத்துள்ளவர்களும் இதனை ஆர்வமுடன் வங்கிச்செல்வதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குப்பைகளில் உருவாக்கப்படும் இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.