தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்தில் இருந்து, மூன்றாவது தரத்துக்கு உயர்த்தி இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய வருமானம் இல்லாததால், விமான சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டன. இந்நிலையில், இந்த தரம் உயர்த்தல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்னும் கூடுதல் சலுகைகளும், கட்டமைப்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.