தமிழ்நாடு

Thoothukudi Accident | திடீரென சரிந்து விழுந்த சர்ச் மேற்கூரை | உள்ளே சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள்?

Thoothukudi Accident | திடீரென சரிந்து விழுந்த சர்ச் மேற்கூரை | உள்ளே சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள்?

thanthitv

Thoothukudi Accident | திடீரென சரிந்து விழுந்த சர்ச் மேற்கூரை | உள்ளே சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள்?

தூத்துக்குடியில் தேவாலய மேற்கூரை சரிந்து விபத்து - 6 பேர் படுகாயம் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளப்பட்டி மீனவர் கிராமத்தில், கட்டப்பட்டு வந்த 'நல்ல ஆலோசனை மாதா' தேவாலயத்தின் மேற்கூரை கான்கிரீட் பணியின்போது திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Air India | Pilot | விமானிகளிடம் போதைப்பொருள் சோதனை.. ஏர் இந்தியா அதிரடி

El Nino | Cauvery | DK Shivakumar | காவிரி விவகாரம்.. `எல் நினோ'வை வைத்து.. கர்நாடக அரசு புது கேம்

Breaking | Medical Insurance | மருத்துவ காப்பீடு தராத அதிகாரி |கோர்ட் பரபரப்பு உத்தரவு

EPS | AIADMK | SPV | "முடியாது.." EPSக்கு பெரும் ஷாக் கொடுத்த SPV, நத்தம் விஸ்வநாதன்

Kulasai | Rocket Launch Pad | தனியார் வசம் செல்கிறதா குலசை ராக்கெட் ஏவுதளம்?