தமிழ்நாடு

பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை பரங்கிமலையில் பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

* பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்த பத்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

* இந்நிலையில் நேற்று முன்தினம் பார்வையற்ற தனது மகன் பரத், மயங்கி கிடப்பதாக கூறி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பத்மா கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* ஆனால் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார், பத்மாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். கணவருடன் பிரிந்து வாழ்ந்த விரக்தியில் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

* முதலில் பார்வையற்ற 13 வயது மகனின் கழுத்தை பிளாஸ்டிக் பையால் மூடி நெறித்தாகவும், பின்னர் அதேமுறையில் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

* ஆனால் தனது தற்கொலை முயற்சி தோல்வி அடைந்ததால், மயங்கி கிடந்த மகனை காப்பாற்றி விடலாம் என நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் பத்மா தெரிவித்துள்ளார். இதனையடுத்து பத்மாவை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்