தமிழ்நாடு

Chennai Holi Celebration | ஹோலி கொண்டாட்டத்தின் புராண கதை இதுதான்.! - மொழிகளை தாண்டி வந்த வண்ணம்..

சென்னையில் ஹோலி: மொழிகளை தாண்டி வண்ணக் கொண்டாட்டம்

thanthitv

#Chennai | #Holi | #HoliCelebration | #NorthIndians | #ThanthiTV Chennai Holi Celebration | ஹோலி கொண்டாட்டத்தின் புராண கதை இதுதான்.! - தமிழ்நாட்டின் பல நகரங்களில் ஹோலி கோலாகல கொண்டாட்டம்.. மொழிகளை தாண்டி வந்த வண்ணம்.. ஹோலி பண்டிகை என்பது இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். முக்கியமாக வட இந்தியாவில் முக்கியமான பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்று. இந்த ஹோலி பண்டிகைக்கு பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றது. புராணக் கதைகளின் படி, அசுர அரசன் ஹிரண்யகசிபு தனக்கு பிடிக்காத நாராயண கடவுளை அவனது மகன் பிரகலாதன் வணங்கியதால் ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா மூலம் பிரகலாதனை நெருப்பில் கொளுத்த முயன்றார். ஆனால் நாராயணன் அருளால் ஹோலிகா எரிந்து பிரகலாதன் காக்கப்பட்டதாக புராணக்கதையில் கூறப்படுகிறது. அதீத பக்தி காரணமாகவே பிரகலாதன் உயிர் பிழைத்ததும், தீமையை குறிக்கும் ஹோலிகா அழிந்ததும் தான், ‘நல்லது தீமையை வென்றது’ என்ற கருத்தை இந்த பண்டிகை எடுத்துக்காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனை நினைவுகூறும் விதமாக, வடஇந்தியாவின் பல பகுதிகளில் ‘ஹோலிகா தஹன்’ எனப்படும் நெருப்பு நிகழ்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், சில புராணக் கதைகளில் இது கிருஷ்ணர் தொடர்பான பக்தி மரபு ஹோலியின் நிறக் கொண்டாட்டத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்த பண்டிகை வரலாற்று ஆய்வுகளின் படி, 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் வடஇந்திய வணிகர் சமூகங்கள் தென்னிந்திய நகரங்களுக்கு குடியேறத் தொடங்கியதன் மூலம் பரவியதாக சொல்லப்படுகிறது. சென்னையில், குறிப்பாக சவுகார்பேட்டை பகுதி காலப்போக்கில் மார்வாடி மற்றும் பிற வடஇந்திய சமூகங்களின் முக்கிய மையமாக வளர்ந்தது.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC