தமிழ்நாடு

ஓட்டு போட `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. உங்ககிட்ட இருக்கா? இல்லையா?

ஓட்டு போட `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. உங்ககிட்ட இருக்கா? இல்லையா?

thanthitv

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் மாவட்ட தேர்தல் அலுவலரால் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாய்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குபதிவின் போது வாக்காளர் அடையாள அட்டை அளிக்க இயலாதவர்கள் மாற்று அடையாள ஆவணம் ஒன்றை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது மருத்துவ காப்பீட்டு அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், பான் அட்டை (PAN Card), தேசியமக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அசல் பாஸ்போர்ட்டின் அடிப்படையில் அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது..

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்