தமிழ்நாடு

திருவெறும்பூர் : அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றிய வருவாய்த் துறை அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் சிலரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை 2வது முறையும் அகற்றப்பட்டது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் சிலரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை 2வது முறையும் அகற்றப்பட்டது. பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் கடந்த 30ஆம் தேதி மகாபோதி பௌத்த சங்கத்தினர் வைத்த மூன்றரை அடி உயர புத்தர் சிலை போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டது. அந்த சிலையை மீட்டு கணேசபுரம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 9ஆம் தேதி வைத்து வழிபடத் தொடங்கினர். புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் புத்தர் சிலையை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெல் நிறுவன மனிதவளத்துறை பொதுமேலாளர் சிவக்குமார் மற்றும் பெல் நிறுவன ஊழியர்கள் விஜயகாந்த், தமிழ் தாசன், தேவேந்திரன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்