தமிழ்நாடு

Thiruvarur | தாய்க்காக மகன் கட்டிய தென்னகத்தின் 'தாஜ்மஹால்' - தமிழ்நாட்டில் இப்படி ஒரு படைப்பா!

Thiruvarur | தாய்க்காக மகன் கட்டிய தென்னகத்தின் 'தாஜ்மஹால்' - தமிழ்நாட்டில் இப்படி ஒரு படைப்பா!

thanthitv

தாய்க்காக மகன் கட்டிய தென்னகத்தின் 'தாஜ்மஹால்' - தமிழ்நாட்டில் இப்படி ஒரு படைப்பா! திருவாரூர் அருகே தாய்க்காக மகன் கட்டிய தென்னகத்தின் 'தாஜ்மஹால்' திருவாரூர் அருகே அம்மையப்பனில், உயிரிழந்த தாயின் நினைவாக மகன் கட்டிய 'தென்னகத்தின் தாஜ்மஹால்' கோடை விடுமுறையை முன்னிட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. சென்னையில் தொழிலதிபராக உள்ள அமுர்தீன் என்பவர், தனது தாய் ஜெய்லானி பீவி மீது கொண்ட பாசத்தால், ராஜஸ்தான் பளிங்கு கற்களைக் கொண்டு 8 ஆயிரம் சதுர அடியில் இந்த பிரம்மாண்ட நினைவிடத்தை அமைத்துள்ளார். ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்க்க முடியாத மக்கள், குடும்பத்துடன் இங்கு வந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கோடை வெயிலைத் தவிர்க்கப் பார்வையாளர்களுக்கு இலவசமாக நீர்மோர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தாய்க்குப் பெருமை சேர்த்த மகனின் இந்தச் செயலைப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது