தமிழ்நாடு

தீயாய் பரவிய அரசு பள்ளி மாணவர்களின் காட்சிகள்..11 மீது பாய்ந்த வழக்கு... திருவாரூரில் அதிர்ச்சி

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. • திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே கடந்த பத்தாம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மாலை ஒரு தரப்பு மாணவனை மற்றொரு தரப்பு மாணவன், தன் உறவினர்கள் நான்கு பேருடன் சேர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் மற்றொரு தரப்பு மாணவர், அவரது உறவினர்களுடன் சேர்ந்து இந்த ஐந்து பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவன் காயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் • இருதரப்பிலும் மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பூந்தோட்டம் கடைவீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்