தமிழ்நாடு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

தந்தி டிவி
திருவண்ணாமலையில் தனியார் நகைக்கடை நிறுவனத்திடம், திமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவர் போலி வில்லங்க சான்று மூலம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தில் பங்கு இருப்பதாக ராதா என்ற பெண் கூறி உள்ளார். இப்பிரச்சினையை தீர்க்க மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு பன்னீர் செல்வம் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம், அவரது மனைவி மாதவி மற்றும் ராதா ஆகியோர் கூட்டாக சேர்ந்து நாடகமாடி நிலத்தை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில், பன்னீர் செல்வம், மனைவி மாதவி, கூட்டாளி ராதா ஆகியோர் மீது மோசடி, கூட்டுசதி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்