Thiruvannamalai | Police | AI | சூப்பர் மார்க்கட்டில் திருடிய நபர் - ஏஐ மூலம் சிக்கினார் #Thiruvannamalai #Police #AI திருவண்ணாமலையில் பல்பொருள் அங்காடியில் தொடர்ந்து பொருட்களை திருடி வந்த நபரை, ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமரா மூலம் கண்டறிந்த ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்திரா நகரைச் சேர்ந்த 42 வயது சலீம், கடையில் பொருட்களை வாங்குவது போல் நடித்து சட்டைப்பைக்குள் முறுக்கு மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்துள்ளார். ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் கண்காணித்து வந்த நிலையில், கேமராவில் சலீம் அடையாளம் காணப்பட்டு ஊழியர்கள், பொருட்களை பறிமுதல் செய்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.