சீனித் துளசி என்ற செடி மூலம் பரவலாக அறியப்பட்டவர் ஜஸ்வந்த் சிங். இவர் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் வகையில், தமது வீட்டில் உள்ள சந்தன மரம், மாமரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை செதுக்கி வைத்துள்ளார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால், திருவள்ளுவரை பெரிதும் விரும்புவதாக கூறிய அவர், திருக்குறளை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.