திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாந்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் 6 பூட்டுகளை உடைத்த மர்மநபர்கள், 78 ஆயிரம் ரூபாய் மதுவகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். கொரோனா எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மர்ம இரும்புக் கதவில் இருந்து 6 பூட்டுகளையும் உடைத்துள்ளனர். முன்னதாக அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து உடைத்துள்ளனர். இதனிடையே, திருடப்பட்ட 10 பெட்டிகளின் மது பாட்டில்களையும் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.