தமிழ்நாடு

உடலை தொட்டதும் பாய்ந்த கரண்ட் - சென்னை அருகே பயங்கரம்

தந்தி டிவி

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தில், விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி, பிரகாஷ் என்பவரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட வீரமுத்து என்பவர், பிரகாஷை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில் அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் பிரகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு போராடிய வீரமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவ்வூர் மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரித்துறையின் அலட்சிப் போக்கே, இந்த உயிரிழப்புக் காரணம் என அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்