தமிழ்நாடு

தனியார் மருத்துவமனை செய்த செயல்.. வேதனையில் கண்ணீருடன் கதறி அழுத தாய்.. உடனே எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

பெத்திக்குப்பம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 30 வயதாகும் மகேஷ், கடந்த 10-ம் தேதி இரவு, தொடர் வாந்தி ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது. அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், மகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை மூடக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகேஷின் தாயார் விஜயா,

தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி