சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயும், இளைஞரும் போக்சோவில் கைது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும், அதற்கு உடந்தையாக இருந்து, சிறுமிக்கு அவருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறப்படும் சிறுமியின் தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்