திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்யக்கோரி ரஞ்சித்குமார் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகார் அளித்த உடனேயே, ஜெயலட்சுமியை கைது செய்யவில்லை என ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் அங்கிருந்த இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினார்.