திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில், காணொலி காட்சி மூலம் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அரசு மருத்துவக் கல்லூரியானது, பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது