தமிழ்நாடு

கணவனை சிறைக்கு தள்ளிய மனைவியே விடுவிக்கக் கோரி மனு - திருப்பத்தூரில் நடந்த திருப்பம்

தந்தி டிவி

கணவன் மீது புகார் அளித்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தந்த மனைவியே, கணவரை மீண்டும் விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. பனங்காட்டூர் பகுதியை சேர்ந்த இன்பகுமார் மீது அவரது 2வது மனைவி சந்தியா கொடுத்த புகாரில், அவர் மீது போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்பகுமாரை விடுவிக்கக் கோரி சந்தியா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 3 பெண் குழந்தைகளுடன் முதல் மனைவியும், ஒரு பெண் குழந்தையுடன் தானும், ஆதரவின்றி தவிப்பதால், இன்பகுமாரை விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்