#thirupparankundramissue #thirupparankundramlatestnews மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு, சமைப்பதற்கான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல காவல்துறையினர் தடை விதித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்கு ஒருமுறை மாறும் அக்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், தக்காளி, அரிசி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை தர்காவுக்கு கொண்டு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் காலை 6 மணிக்கு திறக்க வேண்டிய தர்கா இதுவரை திறக்கப்படவில்லை. தர்கா சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர் மேலும், பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.