திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அவசர கோலத்தில் தீர்ப்பு வழங்கியதாக கூறி மதுரையில் மத நல்லிணக்க பேரணி நடைபெற்றது. மதுரை ராஜா முத்தையா மன்றத்திலிருந்து தொடங்கி முக்கிய விதிகள் வழியாக வந்து காந்தி அருங்காட்சியகத்தில் பேரணி முடிவடைந்தது. இந்த பேரணியில் மதநல்லிணக்கத்தை குறிக்கும் வண்ணம் சிறுவர்கள் வேடமணிந்து கலந்து கொண்டனர். இதில் சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.