தமிழ்நாடு

திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகள் - ஆர்டிஐ-யில் வெளியான தகவல்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை புறநகர் பேருந்து நிலையம் பணிகள் டிசம்பர் மாதம் முழுமை பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

திருமழிசை, குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 486.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் எப்போது நிறைவு பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. திருமழிசை பேருந்துநிலைய பணிகள் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என ஆர்டிஐ பதில் அளித்துள்ளது. கூடுதல் தளம், கழிப்பிட வசதி, குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் பணிகள் திட்டமிடப்பட்ட பட்டுள்ளதால் இன்னும் 50 சதவீத பணிகள் முடிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருமழிசையும், கிளாம்பாக்கம் பேருந்துநிலையமும் ஒரே நேரத்தில் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்