தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 200 கடைகள் அமைக்கப்பட்டு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே லாரிகளில் காய்கறிகள் வரத் தொடங்கிய நிலையில், வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பிறகே, அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே, திருமழிசைக்கும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்