சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை வதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெய்வேலி அருகே குறவன்குளத்தை சேர்ந்த ராதிகா மற்றும் விக்னேஷ் ஆகியோர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.