அங்குள்ள சவுடார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோயில் மூடப்பட்டதால், செளடார்பட்டி கிராமத்திற்கு சாபம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதனால் 35 முதல் 40 வயதிலேயே ஆண்கள் இறப்பதால், விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், வழிபாடு நடத்தப்படாததால், கோயில் சிதிலமடைந்து அழியும் நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், தங்களது கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள சாபம் நீங்கி விமோசனம் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.