நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி வாழை, பாக்கு, கமுகு உள்ளிட்ட குளிர்ச்சியான மரங்களை கொண்டு வந்த மண்டபத்தில், வெட்டிவோ் பந்தல் அமைக்கப்பட்டது. பின்னர் யானை மரியாதை செலுத்த உற்சவா் சுவாமி, தேவியருடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.