திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையர் குமரதுரை ஆய்வு மேற்கொண்டார். அக்கோவில் வளாகத்திலிருந்து வெளியே செல்லும் கழிவு நீர் மடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன் பின்னர், சம்பவ இடத்தை பார்வையிட்ட இணை ஆணையர் குமரதுரை, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கு நவீன கருவிகள் கொண்டு வரப்படும் என்றார்.