தமிழ்நாடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் - பிப்ரவரி 22 ஆம் தேதி திறப்பு விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், பிப்ரவரி 22 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் அமைக்கப்படுவதுடன் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்