நள்ளிரவு 1 மணிக்கு நடுங்கவிட்ட திருச்செந்தூர் கடல்.. 500 மீட்டருக்கு கொந்தளிப்பு.. 100 மீட்டர் கரைக்கு வந்ததால் அதிர்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு, நள்ளிரவில் திடீரென கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அலைகளின் வேகம் அதிகரித்து, சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும், கடல்நீர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கரைப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் கடற்கரையில் இருந்த சிறு வியாபாரிகளின் கடைகளையும் கடல்நீர் சூழ்ந்தது. அங்கு இருந்த பக்தர்களை பாதுகாப்பாக இருக்குமாறு கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
#tiruchendur #murugantemple #tiruchendursea #thanthitv