திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சிவி சண்முகம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி சுற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தரப்பட்டுள்ள அதிகாரிகளின் செல் நம்பருக்கு போன் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தி, பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.