தமிழ்நாடு

"திருடர் Sir.. கொஞ்சம் எந்திரிங்க சார்.." - திருட சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

தந்தி டிவி

"திருடர் Sir.. கொஞ்சம் எந்திரிங்க சார்.." - திருட சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

#kannyakumari #thanthitv #theft #Thief

கன்னியாகுமரியில், கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய சோம்பேறி திருடனை வீட்டு உரிமையாளர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடியிலுள்ள தனது மகள் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்கப்பதற்காக ஊர் திரும்பிய மோகன்தாஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் பையில் சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மோகன்தாஸ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கிபிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட வந்த இளைஞர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என தெரிய வந்தது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்