தமிழ்நாடு

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தகுமார், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவன் அதே பகுதியை சேர்ந்த வேங்கையன் என்பது தெரியவந்தது. பின்னர் அவனை கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த நிலையில், போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்