தமிழ்நாடு

என்னைய என்ன பண்ணிடுவாங்க.. சஸ்பெண்ட் தான.. பாத்துக்கலாம்" - இன்ஸ்பெக்டர் பேசிய வீடியோ வைரல்

தந்தி டிவி

சேலத்தில் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளரின் காட்சி, வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பேருந்து நிலையத்தில் முரளி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் தமிழழகன், கடனாக வாங்கிய ஒரு கோடியே 5 லட்சம் பணத்தை தராததால், காவல் நிலையத்தில் புகாரளித்தார். பணத்தை மீட்டு தர காவல் ஆய்வாளர் சரவணன் 6 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். பணத்தை முழுமையாக மீட்டு தராத நிலையில் தற்போது கேட்டால், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் தன்மீது புகாரளித்தால் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்வார்கள், பின்னர் மீண்டும் வந்து பணியாற்றுவேன் என்று அவர் பேசிய காட்சி, வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி