தமிழ்நாடு

பசும்பொன் தேவர் குருபூஜை.. அரசு தரப்பு முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜையை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைப்படி, நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருபவர்கள், அவர்களது பகுதியில் உள்ள டிஎஸ்பி அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று பாஸ் பெற்று கொள்ள வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள், சாதி மத வாசகங்கள் அடங்கிய பேனர்கள் இடம் பெற்றிருக்கக் கூடாது. வாகனத்தின் உரிமையாளர் அந்த வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். வாகனத்தில் ஆயுதங்கள், மது பாட்டில்கள் எடுத்து வரக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தான் வர வேண்டும். போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 

Ramadoss | PMK | "ராமதாஸ் எடுத்த முடிவு சரியானது" - விளக்கமாக சொன்ன டி.வி.சோமு

Palani | CBCID | பழனி நில மோசடி விவகாரம்.. சாட்சிகளிடம் இறங்கிய CBCID

Ramadoss | PMK | ``அரசியலில் இருந்தே விலகுகிறேன்’’ - அருகே அன்புமணி.. ராமதாஸ் அறிவிப்பு

Delhi Protest | பிரஸ்ஸைகூட்டி கண்முன்`ஆதாரத்தை’ நிறுத்திய ராகுல்.. அதிரும் டெல்லி

TVK MLA Case | அசோக்குமாரை தனியாக.. அதிரும் திருவல்லிக்கேணி ஸ்டேஷன்