தமிழ்நாடு

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மாணவ, மாணவிகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனாட்சிபுரம், பொட்டல்கலம், அணைக்கரைப்பட்டி, மீனா விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் செல்வது வழக்கம். இந்நிலையில், பொட்டல் கலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலரை வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தபோதிலும், போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC