தமிழ்நாடு

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் கைது

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல ரவுடியாக அறியப்படும் இவர் மீது, தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறையும் சென்றுள்ளார்.

சமீபத்தில், மதுரை சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் நாகராஜ் மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர் தேனி காவல்நிலைய ஆய்வாளருக்கும் மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து, இவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முடிந்தால் தன்னை பிடியுங்கள் என போலீசாருக்கு நாகராஜும் சவால் விடுத்திருந்தார்.. தலைமறைவாக இருந்த புல்லட் நாகராஜ், இன்று காலையில் போலீசாரிடம் பிடிபட்டார்.

தென்கரை பகுதியில் புல்லட்டில் சென்று கொண்டிருந்த நாகராஜை, பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் விரட்டிச் சென்று பிடித்தார். இந்தநிலையில் புல்லட் நாகராஜ், சமீபத்தில் வெளியிட்ட மிரட்டல் ஆடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புல்லட் நாகராஜிடம் ரூ.1 கோடி கள்ள நோட்டு

காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக கைதான புல்லட் நாகராஜிடம் விசாரணை தீவிரம்

* ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டு சிக்கியது - 2000, 500,100 நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்.

* புல்லட் நாகராஜ் வீட்டில் பணம் அச்சிடும் இயந்திரம் வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை.

* பெரியகுளம் காவல்நிலையத்தில் புல்லட் நாகராஜிடம் போலீசார் விசாரணை.

* நீதிமன்ற முத்திரைகளும் நாகராஜ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்