தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சி - தேனி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

தந்தி டிவி

காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் வரவேண்டாம் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையத்தில் பயிற்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி வரும் ஜனவரி 09ம் தேதி முதல் பிப்ரவரி 08ம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் இப்பகுதிக்குள் வரவேண்டாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்