தமிழ்நாடு

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த கேரளா மாநிலம், வண்டிபெரியாரை சேர்ந்த சைஜூ என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் கல்லூரி விடுதியில் கஞ்சா பயன்படுத்தியது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவரின் அறையில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சா போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு