தமிழ்நாடு

Theni Flood | புரட்டியெடுக்கும் மழை.. வெள்ளத்தில் மிதந்த பண்ணை.. கண்முன்னே கோழிகளுக்கு நடந்த சோகம்!

தந்தி டிவி

தேனி மாவட்டம் தேவாரம் மூணாண்டிப்பட்டி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோழிப்பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான கோழிகள் இறப்பு -லட்சக்கணக்கில் நஷ்டம் உரிமையாளர் வேதனை. தேனி மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது.இதில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது இதனால் தேவாரம் பகுதியில் உள்ள ஓடைகளில் இரவு நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காற்றாற்று வெள்ளம் ஓடைகளில் வந்த போது ஓடைகளில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகே இருந்த விவசாய நிலங்கள் மற்றும் கோழிப்பண்ணைக்குள் புகுந்தது இதனால் கோழிப்பண்ணைக்குள் இருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது.இரவு நேரம் என்பதால் பண்ணைகளில் இருந்து கோழிகளை காப்பாற்ற முடியவில்லை. இதன் காரணமாக உரிமையாளருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தேவாரம் பகுதியில் ஓடைகளில் காற்றாற்று வெள்ளம் வந்து பண்ணைக்குள் புகுந்ததால் கோழிகள் இறந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த கோழிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.மேலும் ஓடைகள் சரியாக தூர்வாரப்படாததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.எனவே ஓடைகள் உரிய முறையில் தூர்வாரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மழை வெள்ளத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்