தமிழ்நாடு

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் போடி குலாளர் பாளையத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தமிழ்செல்வி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது குடும்ப தகராறில், ஜெயபால் தாக்கியதில், மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்தார். இதனால் ஜெயபால் சிறை சென்று திரும்பிய நிலையில், தன் மகளை அடித்து கொன்ற ஜெயபாலை தீர்த்து கட்ட தமிழ்செல்வியின் தந்தை வீர‌ய்யா மதுரையை சேர்ந்த கூலிப்படையுடன் போடி வந்துள்ளார் . ஆம்னி வாகனம் அங்கும் இங்கும் திரிவதை கவனித்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த‌தில், வாள், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வீரய்யா, மதுரை கூலிப்படையை சேர்ந்த கணேசன், ஜெகன், தேவேந்தர் உள்ளிட்ட கூலிப்படையினர் என 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்